கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 வயது ஆண் குழந்தை பலி... தாய் கதறல்

0 2862

கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 வயது ஆண் குழந்தை விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர், லட்சுமி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகாந்த் - ஜெப செல்வி தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் சாய்சரண் என்ற ஆண் குழந்தை இருந்தது. எலக்ட்டீசியனான விஜயகாந்த், வேலை நிமித்தமாக திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் ஜெபசெல்வி, தனது குழந்தையுடன் தனியாக இருந்தார். நேற்று மதியம் ஜெபசெல்வி வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது வீட்டின் வாயிற்கதவின் அருகில்விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சாய்சரண் திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெபசெல்வி, பல இடங்களில் குழந்தையை காணாததால் கதறி அழுதார்.

ஜெபசெல்வியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் குழந்தையை தேடினர். அப்போது வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் தொட்டியில் குழந்தை சாய்சரண், விழுந்து கிடந்து தெரிய வந்துள்ளது. உடனடியாக குழந்தையை மீட்டு அருகேயுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதை தெரிவித்துள்ளனர். குழந்தையின் உடலை பார்த்து அதன் தாய் ஜெபசெல்வி கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்தது.

இதனைத் தொடர்ந்து தகவலறிந்த பீர்க்கன்காரணை போலீஸார் இறந்த குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் இறப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது ஆண் குழந்தை கழிவுநீர் தொட்டியில் விழுந்து பலியான சம்பவம் தாம்பரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments