கரீபியன் தீவு நாடான ஹைத்தியில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் காவல் அதிகாரி கொலை : குற்றவாளிகள் தப்பியோட்டம்

0 1502
கரீபியன் தீவு நாடான ஹைத்தியில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் காவல் அதிகாரி கொலை : குற்றவாளிகள் தப்பியோட்டம்

ரீபியன் தீவு நாடுகளான ஹைத்தியில் சிறைத்துறை அதிகாரியைக் கொன்று கொடூரமான குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

தலைநகர் போர்ட் அ பிரின்ஸ் என்ற இடத்தில் உள்ள சிறையில் கொடூரமான குற்றங்கள் செய்த குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறையில் திடீரென ஏற்பட்ட கலவரத்தைப் பயன்படுத்தி காவல் அதிகாரி மற்றும் 7 கைதிகள் கொலை செய்யப்பட்டனர்.

அப்போது வன்முறையில் ஈடுபட்ட அர்னல் ஜோசப் என்ற குற்றவாளியும், அவனது கூட்டாளிகளும் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.

தப்பிச் சென்றவர்களில் 40 பேர் மீண்டும் பிடிபட்டுள்ளதாகவும், எஞ்சியவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும், ஹைத்தி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments