கோவின் இணையதள பராமரிப்பு பணிக்காக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 2 நாட்கள் நடைபெறாது என சுகாதாரத்துறை விளக்கம்

0 1766
கோவின் இணையதள பராமரிப்பு பணிக்காக கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 2 நாட்கள் நடைபெறாது என சுகாதாரத்துறை விளக்கம்

ணையதள பராமரிப்பு பணிக்காக இன்றும், நாளையும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு ஊசி போடப்பட்டு வருகிறது.

ஒரு கோடியே 34 லட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டு உள்ள நிலையில், 2-ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு நாளை மறுநாள் முதல் தடுப்பூசி போடப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி பெறும் பயனாளர்கள் ‘கோ-வின்’ இணையதளத்தில் பதிவு செய்துதான் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

இந்த இணையதளத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.எனவே நாடு முழுவதும் இன்றும் நாளையும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments