எல்லை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்- சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் பேச்சு

0 1310
எல்லை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும்- சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் பேச்சு

ல்லை பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், கிழக்கு லடாக்கில் பாங்காங் ஏரி பகுதியில் இருந்து இந்தியா - சீனா ராணுவத்தின் முன்கள படைகளை விலக்கியிருப்பதால் நிலைமை சற்று எளிதாகி இருப்பதாக கூறினார்.

இருதரப்பினருமே கடினமான முயற்சியில் எட்டிய இந்த முன்னேற்றத்தை மதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments