சீரியல் பார்த்துட்டு சின்சியரா தூங்கிய குடும்பம்.... நள்ளிரவில் வெடித்து சிதறிய டிவி!

0 168896

கன்னியாகுமரி அருகே தொலைக்காட்சி சுவிட்ச்சை அணைக்காமல் தூங்கியதால், நள்ளிரவில் டிவி வெடித்து சிதறி 3 வீடுகள் தீக்கிரையாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே வசந்த குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில், இரவில் அனைவரும் சீரியல் பார்த்துவிட்டு டிவியை ஆஃப் பண்ணாமலேயே தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால், நள்ளிரவிலும் இயங்கி கொண்டிருந்த தொலைக்காட்சி, திடீரென வெடித்து வீட்டில் தீ பற்றி எரிந்தது. வீட்டில் அயர்ந்து தூங்கிகொண்டிருந்தவர்கள், வெடி சத்தத்தை கேட்டு பாதி தூக்கத்தில் விழித்துள்ளனர். அப்போது வீட்டின் ஓடு, டிவி என அனைத்தும் சுக்குநூறாகியுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வசந்த குமாரின் வீட்டில் பற்றிய தீ, பக்கத்து வீடுகளுக்கும் பரவ, அந்த வீடுகளும் தீக்கிரையாகின. இதனையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியோடு, கொழுந்துவிட்டு எரிந்த தீ பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிர் சேதமோ தீ காயமோ எற்படவில்லை என்றாலும், 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

இரவு நேரத்தில், வீட்டில் டிவியை அணைக்காமல் உறங்கியதால், ஏற்பட்ட விபத்து அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments