3வது காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 0.4 சதவீதம் வளர்ச்சி: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவிப்பு
3வது காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 0.4 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது என மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் அறிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்புகளால் நாட்டில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் இறுதி வாரம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொழில்கள் முடங்கி, உற்பத்தி குறைந்ததால் பொருளாதாரமும் தேக்கமடைந்தது.
இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டில் முதல் 2 காலாண்டுகளில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு, 3வது காலாண்டில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.4 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது.
எனினும், ஒட்டு மொத்த அளவில் வளர்ச்சியானது 8 சதவீதம் சுருங்கும் என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
Comments