தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்.. 30 லட்சம் லாரிகள் ஓடவில்லை

0 3442

டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழகம் உள்பட 6 மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்மண்டலத்திற்குட்பட்ட தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6 மாநிலங்களில் உள்ள 30 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை. இதனால் ஒரே நாளில் 6 மாநிலங்களிலும் சேர்த்து லாரி உரிமையாளர்களுக்கு 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments