தெற்கு ரயில்வேக்குட்பட்ட பகுதிகளில் 20 முன்பதிவில்லா விரைவு ரயில்கள்: ரயில்வே வாரியம் அனுமதி

0 3163
தெற்கு ரயில்வேக்குட்பட்ட பகுதிகளில் 20 முன்பதிவில்லா விரைவு ரயில்கள்: ரயில்வே வாரியம் அனுமதி

தெற்கு ரயில்வே ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக 20 முன்பதிவு இல்லா விரைவு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

இந்த ரயில்களின் இயக்கம் மார்ச் 15 முதல் ஏப்ரல் 2 வரையுள்ள நாட்களில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் கோவை - மேட்டுப்பாளையம், விருத்தாசலம் - சேலம், கரூர் - திருச்சி, சென்னை - புதுச்சேரி, தாம்பரம் - விழுப்புரம், திருச்சி - காரைக்குடி ஆகிய வழித்தடங்களில் முன்பதிவு இல்லா விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

முன்பதிவில்லாப் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு இந்த ரயில்களில் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments