வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு : 40 வருட உழைப்பு நிறைவேறிருக்கு... ஆனந்த கண்ணீர் விடும் அன்புமணி!

0 10082

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன.இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.

இந்த நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீடு 3 ஆக பிரித்து உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட தொகுப்பில் உள்ள வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7 சதவீதம் உள் ஒதுக்கீடும், எஞ்சிய பிரிவினருக்கு 2.5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 6 மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படும். அப்போது இட ஒதுக்கீடு மாற்றி அமைக்கப்படும் என முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்தநிலையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தனது தந்தை ராமதாஸிடம் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஆனந்த கண்ணீர் விடும் அன்புமணி, 40 வருச உழைப்பு நிறைவேறிருக்கு.. இன்னும் கேட்டு வாங்குவோம்... இது சாதரண வெற்றி இல்லை என பேசுகிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments