நீதிபதி கலையரசன் ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா நீதிமன்றத்தில் வழக்கு
தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அரியர் தேர்வு ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக மாற்ற கோரியதால், தனக்கு எதிராக திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கோடு குற்றம் சுமத்தப்படுவதாகவும் சுரப்பா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனக்கூறியுள்ள சுரப்பா, விசாரணை ஆணையம் அமைப்பதற்கான நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments