மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகத் தேர்தல் -தலைமைத் தேர்தல் ஆணையம்

0 1959
மேற்குவங்கத்தில், 8 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில், 3 கட்டங்களாகவும், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என, தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

மேற்குவங்கத்தில், 8 கட்டங்களாகவும், அசாம் மாநிலத்தில், 3 கட்டங்களாகவும், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என, தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. 

மேற்குவங்க மாநிலத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு, 6 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. தற்போது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட காரணிகளாலும், இம்முறை, மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, இதனைத் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் மார்ச் 27ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏப்ரல் ஒன்றாம் தேதி, 6, 10, 17, ஆகிய தேதிகளில் முறையே, 2,3,4,5ஆம் கட்ட தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 22, 26, 29 ஆகிய தேதிகளில் முறையே, 6,7,8ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில், 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27ஆம் தேதியும், ஏப்ரல் ஒன்றாம் தேதி 2ஆம் கட்ட வாக்குப்பதிவும், 6ஆம் தேதி, அசாமில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேற்குவங்க மாநிலத்திலும், அசாமிலும், மே மாதம் 2ஆம் தேதி, திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments