தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல், மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை..!

0 4304
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 824 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது என்றார். இந்த தொகுதிகளில் 2.7 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்ற அவர், தேர்தலில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் என்றார்.

தேர்தலை ஒட்டி மற்ற நான்கு மாநிலங்களில் ஒரு செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் பணப்பட்டுவாடாவை கருத்தில் கொண்டு இரு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்ற அவர்,தேர்தலில் வேட்பு மனுத்தாக்கலுக்கு செல்வோர் இரு வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும் என்றார். பிரசாரத்திற்கு வீடு வீடாக செல்வோர் 5 வாகனங்களில் மட்டுமே செல்லஅனுமதி என்றும் அவர் கூறினார்.

புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கு 22 லட்ச ரூபாயும், பிற மாநிலங்களில் ஒரு தொகுதிக்கு 30.8 லட்ச ரூபாயும் தேர்தலுக்கு ஒரு வேட்பாளர் செலவு செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும்,மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என்ற அவர், கேரளா, தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றார்.

தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி தொடங்கும் என்று அவர், மனுத்தாக்கலுக்கு கடைசி நாள் மார்ச் 19 ஆம் தேதி என்றார்.

மனுக்கள் பரிசீலனை மார்ச் 20 ஆம் தேதி நடைபெறும் என்ற சுனில் அரோரா, மனுக்களை வாபஸ் பெற மார்ச் 22 ஆம் தேதி கடைசி நாள் என்றார். தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்ற அவர், வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என்றார்.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி, கேரளாவிலும் அதே நாட்களிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என்றார். கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுமென அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments