தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

0 11820
தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது

தமிழகம், மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை

தமிழகம்

தமிழகத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல்-மார்ச் 12

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்-மார்ச் 19

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுக்கள் பரிசீலனை-மார்ச் 20

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு வாபஸ் கடைசி நாள்-மார்ச் 22

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு நாள்-ஏப்ரல் 6

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள்-மே 2

image

புதுச்சேரி 

புதுச்சேரிக்கு ஏப்ரல் 6ல் தேர்தல்

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல்-மார்ச் 12

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்-மார்ச் 19

புதுச்சேரி தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுக்கள் பரிசீலனை-மார்ச் 20

புதுச்சேரி தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு வாபஸ் கடைசி நாள்-மார்ச் 22

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு நாள்-ஏப்ரல் 6

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள்-மே 2

image

------------------------------------

அசாம்

அசாம் மாநிலத்திற்கு 3 கட்டங்களாக தேர்தல்

அசாம் முதல் கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் - மார்ச் 2

அசாம் முதல் கட்ட தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - மார்ச் 9

அசாம் மாநிலத்திற்கு மார்ச் 27 முதல் கட்ட தேர்தல்

ஏப்ரல் 2ந் தேதி அசாம் இரண்டாம் கட்ட தேர்தல்

ஏப்ரல் 6ந் தேதி அசாம் மூன்றாம் மற்றும் இறுதி கட்ட தேர்தல்

மே 2ந் தேதி ஐந்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை

------------------------------------

கேரளா

கேரளாவிற்கு ஒரே கட்டமாக தேர்தல்

கேரளாவிற்கு ஏப்ரல் 6ந் தேதி சட்டப்பேரவை தேர்தல்

கேரளா மலப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 6ந் தேதி இடைத்தேர்தல்

------------------------------------

மேற்குவங்கம்

மேற்குவங்கத்திற்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு 

------------------------------------ 

கொரோனாவில் இருந்து உலகமே மீண்டு வரும் ஆண்டாக 2021 உள்ளது

கொரோனா உச்சத்தில் இருந்த 2020ம் ஆண்டே சட்டப்பேரவை தேர்தலை நடத்தியுள்ளோம்

கொரோனா சூழலில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை உள்ளது

கொரோனா சூழலில் அதற்கு ஏற்ற வகையில் தேர்தலுக்கு சில முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது

கொரோனா சூழலிலும் பீகார் தேர்தலில் அதற்கு முந்தையை தேர்தலை விட அதிக வாக்குகள் பதிவாகின - சுனில் அரோரா

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதலே தேர்தல் ஏற்பாடுகளை துவங்கி கண்காணித்து வருகிறோம்

தேர்தல் ஆணைய சிறப்பு அதிகாரி உமேஷ் சின்ஹா ஜனவரி மாதம் முதல் தமிழக தேர்தல் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகிறார்

மே 31ந் தேதியுடன் அசாம் சட்டப்பேரவை காலம் முடிவடைகிறது

image

மே 30ந் தேதியுடன் மேற்கு வங்க சட்டப்பேரவை காலம் முடிவடைகிறது
imageமேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது

தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் மே 24ந் தேதியுடன் முடிவடைய உள்ளது

image

புதுச்சேரி சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜூன் 8ந் தேதி வரை உள்ளது

image

ஐந்து மாநிலங்களில் மொத்தமாக சுமார் 18 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள்

image

தமிழகத்தில் 234 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது

ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்கிற நிலை பின்பற்றப்படும்

சுமார் 88ஆயிரம் வாக்குச் சாவடிகள் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளன

புதுச்சேரியில் 1559 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன

கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதால் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கூடுதலாக தேவை

மே 24ந் தேதியுடன் தமிழகத்தின் 15வது சட்டப்பேரவையில் பதவிக் காலம் நிறைவடைகிறது

image

80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்களிக்கும் முறை ஒரு வாய்ப்பாகவே வழங்கப்படுகிறது

விருப்பம் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தபால் வாக்கு முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்

ஐந்து மாநிலங்களிலும் வாக்களிக்கும் நேரம் 1 மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும்

தேர்தல் பிரச்சாரம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் ஆன்லைன் மூலமாக மட்டுமே அனுமதி

வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி

5 வாகனங்களுக்கு அதிகமாக சென்று பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை

பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளில் வழக்கத்தை விட கூடுதலாக மத்திய படைகள் நிறுத்தப்படும்

மேற்கு வங்கத்திற்கு மட்டும் அல்ல தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கும் மத்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

மத்திய படைகளின் பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுவர்

வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள், வெப் கேமராக்கள் பொருத்தப்படும்

பதற்றமான வாக்குச் சாவடிகள் அனைத்தும் வெப் கேமராக்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும்

சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்

சட்டப்பேரவை தேர்தலுக்கான தமிழக சிறப்பு அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அலோக் நியமனம்

தமிழக தேர்தல் செலவின பார்வையாளர்களாக 2 பேர் நியமனம்

மற்ற மாநிலங்களுக்கு தலா ஒரு செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு 2பேர் நியமனம்

தமிழக தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன் மற்றும் பாலகிருஷ்ணா நியமனம்

அனைத்து மத பண்டிகைகள், சிபிஎஸ்இ தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதியை தீர்மானித்துள்ளோம் 

image

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வாக்குச் சாவடிகள் அமைக்க வேண்டும்

வாக்குச் சாவடிகள் அனைத்தும் தரை தளத்தில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி தொடர்பாக செய்தித்தாள்கள், ஊடகங்களில் கட்சிகள் விளம்பரங்கள் மூலம் தெரியப்படுத்துவது கட்டாயம்

ஒரு தொகுதிக்கு ரூ.30.80 லட்சம் வரை மட்டுமே ஒரு வேட்பாளர் தேர்தல் செலவு செய்ய வேண்டும்

சி விஜில் ஆப் மூலம் மக்கள் ஆதாரத்துடன் தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து உடனுக்குடன் புகார் அளிக்கலாம்

பீகார் தேர்தலில் பின்பற்றப்பட்ட வாக்கு எண்ணும் முறையே 5 மாநிலங்களிலும் தற்போது பின்பற்றப்படும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments