கங்கணா ரனாவத்துக்கு எதிரான புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, நடிகர் ரித்திக் ரோஷனுக்கு சம்மன்

0 3688
இந்தி நடிகை கங்கணா ரனாவத்துக்கு எதிரான புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நடிகர் ரித்திக் ரோஷனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தி நடிகை கங்கணா ரனாவத்துக்கு எதிரான புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நடிகர் ரித்திக் ரோஷனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தன்னுடைய பெயரில் ஆள் மாறாட்டம் செய்து தனக்கு தெரிந்தவர்களுக்கு கங்கனா மெயில் அனுப்புவதாக நடிகர் ரித்திக் ரோஷன் கடந்த 2016-ம் ஆண்டு குற்றம்சாட்டியிருந்தார்.

இதனை ஏற்க மறுத்த கங்கனா, அந்த இ - மெயில் ஐ.டியை ரித்திக் ரோஷன் தான் தனக்கு வழங்கியதாகவும், தாங்கள் இருவரும் அதன் மூலமே அடிக்கடி பேசி, பழகி வந்ததாகவும் கூறியிருந்தார்.

இதனையடுத்து, ரனாவத் தனக்கு அடிக்கடி மெயில் அனுப்பி தொந்தரவு செய்ததாக ரித்திக் ரோஷன் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் குறித்து  நாளை காலை 11 மணிக்கு ஆஜராகி விளக்கமளிக்குமாறு ரித்திக் ரோஷனுக்கு மும்பை குற்ற புலனாய்வு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments