முகேஷ் அம்பானி வீடு அருகே நின்ற காரில் வெடி பொருட்கள்; 8 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரம்

0 2363
மும்பையில், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு அருகே வெடிபொருளுடன் நிறுத்தப்பட்டு இருந்த கார், விக்ரோலி பகுதியில் இருந்து திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

மும்பையில், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு அருகே வெடிபொருளுடன் நிறுத்தப்பட்டு இருந்த கார், விக்ரோலி பகுதியில் இருந்து திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

கேட்பாரற்று நின்ற ஸ்கார்பியோ காருக்குள் 2 கிலோ 600 கிராம் எடையுள்ள 21 ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கட்டுமானப் பணிகளுக்கு பள்ளம் தோண்ட பயன்படும் அந்த ஜெலட்டினை, வேறு சில வெடிபொருளுடன் இணைத்தால், அந்த காரை வெடித்துச் சிதறவைக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் அம்பானியின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்படும் காரின் நம்பர் பிளேட்டும், அந்த காரினுள் இருந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 7 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments