6 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி..!

0 38858
கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள 6 சவரன் வரையிலான நகைக்கடன்களும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்றுள்ள அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின்கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.

கொரோனா ஊரடங்காலும், இயற்கைப் பேரிடர்களாலும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைக் காக்கக் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் நிலுவைத் தொகை 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் அளவுக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதை சுட்டிக்காட்டினார். 

இதன் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளதையும் அவர் எடுத்துரைத்தார். இதன் தொடர்ச்சியாக கூட்டுறவு நிறுவனங்களில் விவசாயிகள் பெற்றுள்ள 6 சவரன் வரையிலான நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.

இதேபோல் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள், கூட்டுறவு வங்கிகளிலும் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலும் பெற்று நிலுவையில் உள்ள கடன்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.

கொரோனா சூழலில் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத நிலை உள்ளதாக வந்த கோரிக்கைகளை ஏற்றுக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments