60 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் நன்றி
60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
சிறிய நாடுகள் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு உதவும் விதமாக பிரதமர் மோடி Vaccine Maitri என்ற திட்டத்தை தொடங்கினார்.
அதன் மூலம் அண்டை நாடுகளான நேபாளம், வங்கதேசம், பூட்டான் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கு இந்திய அரசு கொரோனா தடுப்பூசி மருந்துகளை இலவசமாக வழங்கியது.
இதற்காக பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
Comments