சீனாவுடனான படை விலக்கல் ஒப்பந்தம் : எந்த ஒரு பகுதியையும் இந்தியா விட்டுக்கொடுக்கவில்லை - வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர்

0 1116
சீனாவுடனான படை விலக்கல் ஒப்பந்தம் : எந்த ஒரு பகுதியையும் இந்தியா விட்டுக்கொடுக்கவில்லை - வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர்

சீனாவுடனான படை விலக்கல் ஒப்பந்தத்தில் எந்த ஒரு பகுதியையும் இந்தியா விட்டுக் கொடுக்கவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பேசிய அவர், எல்லைக் கோடு விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் இதில் தன்னிச்சையாக எந்தவித மாற்றமும் செய்ய இயலாது’ என்றும் தெரிவித்தார்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் மோதலில் ஈடுபட்டு வந்த ராணுவப் படைகளைத் திரும்பப் பெறுவதாக இரு நாடுகளும் கடந்த வாரம் ஒப்பந்தம் மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments