இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

0 6309
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவு மற்றும் முதுமை காரணமாகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலமானார்.

அவருக்கு வயது 88. சிறுநீரகச் செயலிழப்பு, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் புதனன்று சேர்க்கப்பட்ட அவர் இன்று காலமானார். அவர் உடல் முதலில் அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிலும், பின்னர் தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதன் பின்னர் மதுரை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. 

1989, 1991 என இருமுறை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 மே 21ஆம் நாள் திருப்பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ராஜீவ்காந்தியின் பேச்சை மொழிபெயர்த்த தா.பாண்டியன் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து சென்னைப் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தீவிரச் சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்தார். 

https://fb.watch/3Uet3WWHC7/

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments