கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு சக்கரபாணி கோவில் தேரோட்டம்; பக்திப் பரவசத்தோடு தேரை இழுத்த பக்தர்கள்
கும்பகோணத்தில் மாசி மகத்தை முன்னிட்டு நடைபெற்ற சக்கரபாணி கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முளைப்பாரி, வாழைமரம், தொம்பை தோரணம், மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுதர்சன வள்ளி, விஷ்ணு வள்ளி சமேதமாக சக்கரபாணி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
முன்னதாக மகாமக குளத்தில் புனித நீராடிய பக்தர்கள் அபிமுகேஸ்வரரை வழிபட்டு சக்கரபாணி கோவில் வந்தனர்.
சக்கரபாணி சிவன் அவதாரமாகவும் விஷ்ணு அவதாரமாகவும் கருதப்படுவதால் வில்வம் மற்றும் துளசியால் அர்ச்சனை செய்து வணங்கி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
Comments