சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீயுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து காணொலி மூலம் பேச்சுவார்த்தை

0 887
சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீயுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து காணொலி மூலம் பேச்சுவார்த்தை

சீன வெளியுறவு அமைச்சர் வாங்-யீயுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று காணொலி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் மாநாட்டில் இரு அமைச்சர்களும் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இதன் அடிப்படையில் லடாக் எல்லையில் படைக்குறைப்புக்கான 5 அம்சத் திட்டம் வகுக்கப்பட்டது.

சீனப்படைகள் படிப்படியாக லடாக் எல்லையில் நிறுத்தியிருந்த நூற்றுக்கணக்கான பீரங்கிகள், ஆயிரக்கணக்கான படைவீரர்களை விலக்கிக் கொண்டது.

இந்நிலையில் தற்போதைய எல்லை நிலையை ஆய்வு செய்ததாகவும் அது குறித்து சீன அமைச்சருடன் விவாதித்ததாகவும் ஜெய்சங்கர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments