கிரீன் கார்டுக்கு டிரம்ப் விதித்த தடையை ரத்து செய்தார் அதிபர் ஜோ பைடன்

0 1984
கிரீன் கார்டுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

கிரீன் கார்டுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக குடியேற்றமற்ற எச்1பி விசாக்கள், குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான சில வகை வேலை விசாக்களை நிறுத்தி வைத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் கிரீன் கார்டுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை புதிய ஜனாதிபதி ஜோ பைடன் ரத்து செய்துள்ளார். எச்1பி விசா நடைமுறையில் பழைய முறையே தொடரும் என்று அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது கிரீன் கார்டு தடையையும் நீக்கியுள்ளார்.

இந்த ரத்து அறிவிப்பு லட்சக்கணக்கான இந்தியர்கள் உள்பட பல்வேறு வெளிநாட்டவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments