இஸ்ரோ தயாரித்த பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ தயாரித்த பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவு பெற்றது.
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி சி -51, பிரேசிலின் அமேசானா-1 முதன்மை செயற்கைக்கோள், மேலும் 18 இணை பயணிகள் செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இணை பயணிகள் செயற்கைக்கோள் மீது பிரதமர் மோடியின் படம் மற்றும் மின்னணு வடிவவிலான பகவத் கீதை விண்ணில் செலுத்தப்படுகிறது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த பூமி கண்காணிப்பு செயற்கைகோளான அமேசானா-1 பூமியில் இருந்து 637 கிலோ மீட்டர் தூரத்தில் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
Comments