தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் கேட்பாரற்றுக் கிடந்த மர்மக்கார்

0 2386

மும்பையில் மகாலட்சுமி ஆலயம் அருகே உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லம் அருகே சாலையில் ஜெலட்டின் குச்சிகளுடன் கார் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் வீட்டிற்கு பாததுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேட்பாரற்று நின்றிருந்த அந்த காரை சோதனையிட்ட போலீசார்  அம்பானியின் பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்தும் நம்பர் பிளேட்டுகளையும் மிரட்டல் கடிதம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் சோதனையிடப்பட்டது.

வெடிகுண்டு ஏதும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் ஜெலட்டின் குச்சிகள் மட்டும் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களைக் கைப்பற்றி அந்த மர்ம கார் அங்கு வந்தது எப்படி என்பது பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

மும்பைக்கு வரும் வாகனங்கள் எல்லைகளில் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன.  இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments