யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் முன்பதிவில்லாத பயணச் சீட்டு..! இந்திய ரயில்வே மீண்டும் அறிமுகம்
யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் முறையை இந்திய ரயில்வே மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த முன்பதிவில்லா ரயில் சேவை மீண்டும் படிப்படியாக தொடங்கப்படுகிறது. முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை கவுன்ட்டர்களில் வாங்கும்போது, கூட்ட நெரிசலால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்யவும், யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் முறையை இந்திய ரயில்வே மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் புறநகர் ரயில்கள் மட்டுமின்றி மண்டல அளவிலான ரயில்களிலும் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை பெற முடியும்.
Comments