ஏ புடி புடி... ஸ்கூட்டருடன் சரிந்த மம்தா...பதறிப்போன பாதுகாவலர்கள்!
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்றார். அப்போது ஸ்கூட்டரை ஓட்ட முடியாமல் திணறி சரிந்ததால் உடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் தாங்கி பிடித்துக் கொண்டே சென்றனர்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக போராட்டத்துக்கு மம்தா பானர்ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் ஹஸ்ரா பகுதியில் இருந்து தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் நபன்னாவுக்கு கண்டனப் பதாகையுடன் சென்றார். கொல்கத்தா மேயரான ஃபிஹாத் ஹக்கீம் ஈ-ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றார்.
பிறகு நபன்னா பவனில் இருந்து Kalighat எனும் பகுதிக்கு தானே ஸ்கூட்டர் ஓட்டிச்செல்ல முடிவெடுத்தார் மம்தா. ஆனால் ஸ்கூட்டரில் ஏறி உட்கார்ந்தவுடன் வேகமாக அக்ஸிலேட்டரை திருகியதால் , வாகனம் சற்று சைடு வாங்க தொடங்கியது. ஏங்கே முதலமைச்சர் கீழே விழுந்துவிடுவாரோ என பதறிய பாதுகாப்பு அதிகாரிகள் ஓடி வந்து தடுத்து நிறுத்தினர்.
இதன் பிறகு ஸ்கூட்டர் கீழே விழாதவாறு, அதிகாரிகள் தாங்கி பிடித்துக் கொண்டே இரு சக்கர வாகனம் ஓட்ட கற்று கொடுப்பது போல உடன் சென்றனர். இதனால் வேறு வழி இல்லாமல், உடன் வந்த அரசு அலுவலர்களும், நிர்வாகிகளும், ஸ்கூட்டருக்கு பின்னால் நடந்து சென்றனர். 9 கிலோ மீட்டர் வரை ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டே, ஒரு வழியாக Kalighat பகுதிக்கு வந்தடைந்தனர்.
முதலமைச்சர் சென்ற ஸ்கூட்டரை 2 பாதுகாவலர்கள் தள்ளிக்கொண்டே சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Comments