புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுச்சேரியில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது, குடியரசு தலைவரால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக, புதுச்சேரியின் அனைத்துத் துறைகளும், துணைநிலை ஆளுநரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பெரும்பான்மையை நிரூபிக்க இயலாமல், நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு கவிழ்ந்த நிலையில், அங்கு, என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆட்சியமைக்க உரிமை கோராததால், குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இதற்கு முன்பு, 6 முறை குடியரசு தலைவர் ஆட்சி அமலாகியுள்ளது.
Comments