2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத நாட்டை உருவாக்க மத்திய அரசு திட்டம் - அமைச்சர் ஹர்ஷவர்தன்
2025 ஆம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற சுகாதார அமைச்சக ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர் இதனை கூறினார். உயர் தரத்திலான காசநோய் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாக பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.
காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க துரிதப்படுத்தப்பட்ட மற்றும் நீடித்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
Comments