ஓவர் லோடு ரோட்டுக்கு ஆகாது!
காசுக்கு ஆசைப்பட்டு அதிக பாரம் ஏற்றி வந்த மினி வேனுடன் ஓட்டுனரும் அந்தரத்தில் தொங்கிய சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் அடுத்த சென்றாயசுவாமி ஆலயம் அருகே மினி வேன் ஒன்றின் முன்பகுதி தூக்கியவாறு நின்று கொண்டு இருந்தது. ஏதேனும் சாகசம் நடத்துகிறார்களா என்று ஆச்சரியப்பட்ட அங்கிருந்த மக்கள், பின் சக்கரங்களால் நின்று வானை பார்த்து கொண்டிருந்த வேனை நோக்கி வந்தனர்.
திருப்பத்தூரில் இருந்து ஒரு மொத்த வியாபார கடையில் அதிகளவில் தகர ஷீட்டுகள் மற்றும் இரும்பு குழாய்கள் ஏற்றி கொண்டு மினி வேன் ஒன்று சென்றுள்ளது. அப்போது வேகத்தடை மீது ஏறி இறங்கியபோது அதிக பாரம் காரணமாக மினி வேனின் முன்பகுதி தூக்கி கொண்டுள்ளது.
திருப்பத்தூரில் இருந்து ஒரு மொத்த வியாபார கடையில் அதிகளவில் தகர ஷீட்டுகள் மற்றும் இரும்பு குழாய்கள் ஏற்றி கொண்டு மினி வேன் ஒன்று சென்றுள்ளது. அப்போது வேகத்தடை மீது ஏறி இறங்கியபோது அதிக பாரம் காரணமாக மினி வேனின் முன்பகுதி தூக்கி கொண்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்தரத்தில் தொங்கிய மினி வேனின் முன்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுனர் கீழே இறங்கி பார்த்துள்ளார். அதிக பாரம் பின்புறம் இருந்ததால் தூக்கி கொண்டதை அறிந்த ஓட்டுனர் வண்டியில் இருந்து ஒவ்வொரு தகடுகளாக எடுத்து கீழே வைத்துக் கொண்டிருந்தார். அதனைக் கண்ட அந்த பகுதி மக்களும் அவருக்கு உதவி செய்தனர். அனைத்து இரும்புத் தகடுகளும் எடுத்த பிறகு வாகனம் கீழே இறங்கியது.
சுமார் 1 டன் எடை கொண்ட பாரத்தை, காசுக்கு ஆசைப்பட்டு 500 கிலோ மட்டுமே இழுக்கும் வேனில் ஏற்றியதால் இந்த பரிதாபகரமான நிகழ்வு நடந்தது. அதன்பின்னர் வேறு ஒரு வாகனம் மூலம் அந்த பொருட்களை எடுத்து சென்றனர். இந்த யோசனை முதலிலேயே இருந்து இருந்தால் ஓட்டுனர் வீண் சாகசம் செய்திருக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டிருக்காது.
நகைச்சுவை நடிகர் வடிவேல் சொல்வதை போல ”எதையும் பிளான் பண்ணி பண்ணனும் இல்லான்னா இப்படி தான்” என்பதற்கு அதிக பாரத்தால் அசால்டாக வீலிங் செய்த இந்த மின் வேனின் சாகசம் சிறந்த உதாரணமாகிவிட்டது.
Comments