சிக்கிம், அருணாச்சல் எல்லைகளில் அதிகரித்து வரும் சீன ராணுவ நடமாட்டம்.. கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக தகவல்
கிழக்கு லடாக் எல்லையில் பதற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டாலும், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லைகளில் சீன ராணுவம் மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிக்கிமின் வட எல்லையில் உள்ள நாகு லாவில் படைக்கலன் கிடங்கு மற்றும் சாலை வசதிகளை சீனா அதிகப்படுத்தி வருகிறது. அங்கு சீன துருப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சிக்கிமை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக சீனா அங்கீகரித்தாலும், எல்லைப்பகுதி தொடர்பாக தகராறு உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் நாகு லாவை பதற்றம் நிறைந்த இடமாக வைக்க சீன ராணுவம் முயற்சித்து வருகிறது.
கிழக்கு லடாக்கில் படைகளை வாபஸ் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தும் அதே நேரத்தில், மேற்கில் உள்ள அசல் கட்டுப்பாட்டு எல்லையின் குறுக்கே, மாப்டோ லா-வில் சீன ராணுவம் படைகளையும், ஆயுதங்களையும் குவித்து வருகிறது.
டெப்சாங் பகுதியிலும், தவுலத் பேக் சாலைப் பிரிவிலும் சீன ராணுவம் இதேப் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments