தற்கொலைக்கு முயன்ற பெண்... ஐஸ்கிரீமில் விஷம்!- பறிபோன இரு உயிர்களால் பரிதவிக்கும் உறவினர்கள்

0 7668
கைது செய்யப்பட்ட வர்ஷா

கேரள மாநிலத்தில் தாய் தற்கொலைக்காக வைத்திருந்த விஷம் கலந்த ஐஸ் கிரீமை தவறுதலாக உண்ட 5 வயது மகன் பலியானதைத் தொடர்ந்து, தாயின் சகோதரியும் பலியானதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் வர்ஷா . 25 வயதாகும் வர்ஷாவிற்கு திருமணமாகி 5 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் காசர்கோட்டில் உள்ள கன்ஹங்கட் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார் வர்ஷா.

கடந்த 11 ஆம் தேதி இரவு , தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில், ஐஸ் கிரீம் ஒன்றை வாங்கி அதில் எலி மருந்தைக் கலந்துள்ளார் வர்ஷா . பின் அதனை உட்கொண்ட வர்ஷாவிற்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அறைக்குச் சென்று படுத்துவிட்டார் வர்ஷா. ஆனால் மீதமிருந்த எலி மருந்து கலந்த ஐஸ் கிரீமை அதே இடத்தில் வைத்திருந்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து, வர்ஷாவின் 5 வயது மகன் அட்வய்தும்,19 வயது தங்கை திரிஷ்யா ,வர்ஷா மீதம் வைத்த ஐஸ் கிரீமை எடுத்து சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து, பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு தூங்கியிருக்கின்றனர். 

திடீரென இரவு, வர்ஷாவின் மகன் அட்வய்த்  வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளான். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர்,  அருகிலுள்ள  மருத்துவமனைக்குக் அட்வய்தை கொண்டு சென்றனர். ஆனால் , அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 

அட்வய்த் இறந்தவுடன் திரிஷ்யாவிற்கும் உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் வர்ஷாவின் குடும்பத்தினர்,திரிஷ்யாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஒரு வாரகாலம் கடுமையான சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல், கடந்த நேற்று அவர் உயிரிழந்தனர். விஷம் கலந்த ஐஸ் கிரீமை உண்ட பிறகும், தனக்கு எந்த பாதிப்பும் ஆகாததால், தன்னுடைய தற்கொலை முயற்சியைப் பற்றி குடும்பத்தினரிடத்தில்ர மறைத்துள்ளார் வர்ஷா. குடும்பத்தில் இருப்பவர்களும், அட்வய்த் மற்றும் திரிஷ்யா சாப்பிட்ட  பிரியாணியில் தான் ஏதோ கோளாறு என்று நினைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, வர்ஷாவின் உறவினர் சனோடு என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், வர்ஷா மீதம் வைத்த எலி மறந்து கலந்த ஐஸ் கிரீமை , அட்வய்தும் திரிஷ்யாவும் உண்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, காசர்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து , வர்ஷாவை கைது செய்துள்ளனர். மேலும் வர்ஷாவின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும், போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாயின் அஜாக்கிரதையால் 5 வயது சிறுவன், மற்றும் 19 வயது பெண் உயிரிழந்த சம்பவத்தால், காசர்கோடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments