பொலிவியாவில் வேட்டையாடுபவர்களால் அழிவின் விளிம்புக்கு செல்லும் ஆண்டியன் கான்டோர் பறவைகள்
பொலிவியாவில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பின்னர் இரண்டு ஆண்டியன் கான்டோர் பறவைகள் சிகிச்சைக்கு பின் வனத்தில் விடப்பட்டன.
உலகின் மிகப்பெரிய பறவையான ஆண்டியன் கான்டோர் தென் அமெரிக்க மலை பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.
விஷம் கலந்த உணவை உண்ட இரண்டு பெண் ஆண்டியன் கான்டோர்கள் ஆபத்தான நிலையில் பொலிவியா மலைப்பகுதியில் மீட்கப்பட்டன.
உரிய சிகிச்சைக்கு பின் முழுமையாக குணமடைந்த அவை, கூண்டுகளில் வைத்து பால்கா (palca) மலைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பறக்கவிடப்பட்டன.
அழிந்துவரும் இனங்களில் ஒன்றான ஆண்டியன் கான்டோர்கள், வேட்டையாடுபவர்களிடம் சிக்கி உயிரிழப்பது தொடர்கதையாகிவருகிறது.
Comments