தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்

0 2811

தமிழகம் முழுவதும் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. ஆனால் போராட்டத்தை ஏற்காத தமிழக அரசு, அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு வரவேண்டும் என்றும், பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடையாது என்றும் எச்சரித்தது. ஆனால் திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதன் காரணமாக, சென்னை மாநகரில் 57 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் அலுவல் பணிக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர்.

மதுரையில் 10 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். விருதுநகர் மாவட்டத்தில் 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் 90 சதவீத அளவிலான பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பணிமனைகளில் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மாவட்டத்தில் 50 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அதே சமயம் தனியார் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், ஓலா, ஊபர் உள்ளிட்ட தனியார் கால் டாக்ஸி நிறுவனங்களின் கட்டணம் உயர்ந்துள்ளதாக புகார் எழுந்தது.

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments