9, 10, 11 வகுப்புகளில் அனைவரும் தேர்ச்சி: முதலமைச்சர் அறிவிப்பு

0 48156
9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தேர்வின்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதேபோல் அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு 59இல் இருந்து அறுபதாக உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழகச் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். 2020 - 2021 கல்வியாண்டில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்கொண்ட அசாதாரணச் சூழலைக் கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டும், கல்வியாளர்களின் கருத்துக்களைப் பரிசீலித்தும், 9, 10, 11ஆம் வகுப்பு மாணாக்கர்கள் அனைவரும், முழு ஆண்டுத் தேர்வின்றித் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார். மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகள் அரசால் விரிவாக வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.

அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 59இல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவித்தார். இந்த உத்தரவு, தற்போது அரசு பணியில் இருக்கும் அனைவருக்கும் மற்றும் இந்த ஆண்டு, அதாவது 31.5.2021 அன்று பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments