வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்புவோர்: பாதிப்பு இல்லை என்றாலும் 7 நாட்கள் தனிமை கட்டாயம்
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்புவோர், கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் படி, மஹராஷ்டிரா, கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். பிரிட்டன், பிரேசில், தென் ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை எடுக்கவும், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அவர்களிடம் இருந்து பெறப்படும் மாதிரிகள் கொரோனா மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும். மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments