ஆன்லைன் அறிவியல் கருந்தரங்கில் பங்கேற்க விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் முன் அனுமதி பெற தேவையில்லை - மத்திய அரசு
ஆன்லைனில் நடக்கும் சர்வதேச அறிவியல் கருத்தரங்கங்கள், மாநாடுகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்க வேண்டுமானால், விஞ்ஞானிகள் மத்திய அரசின் முன் அனுமதியை பெற வேண்டும் என்ற ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
லடாக் எல்லைப் பிரச்சனையின் எதிரொலியாக, இந்திய பல்கலைக்கழகங்களில் நடக்கும் சீனா தொடர்பான பாடத்திட்டங்களுக்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது.
அத்துடன் ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்படும் கருத்தரங்குகளில் பங்கேற்க வேண்டுமானால், பல்கலைக்கழகங்களும், விஞ்ஞானிகளும் வெளியுறவு அமைச்சகத்தின் முன் அனுமதியை பெற வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு விஞ்ஞானிகள் தரப்பில் இருந்து கடும் ஆட்சேபம் எழுந்த நிலையில், அவர்களும், ஆராய்ச்சியாளர்களும் முன் அனுமதியை பெற வேண்டியதில்லை என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments