புதிய நீதிபதிகளாக நியமிக்க மும்பை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்த 22 பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் குழு ஏற்காமல் குழு நிறுத்தி வைப்பு ?
புதிய நீதிபதிகளாக நியமிக்க மும்பை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்த 22 பெயர்களை உச்சநீதிமன்ற கொலீஜியம் ஏற்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 18 வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 22 பேரின் தகுதிகள் மற்றும் அவசர கதியில் நடத்தப்பட்ட தேர்வு போன்றவை குறித்து தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான 3 உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் குழு அதிருப்தி தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
94 நீதிபதிகளைக் கொண்ட மும்பை உயர்நீதிமன்றம் தற்போது 64 நீதிபதிகளுடன் இயங்கி வருகிறது.
Comments