புதுச்சேரிக்கு புதிய ஆளுநர்? முன்னாள் டெல்லி காவல்துறை ஆணையர் பி.எஸ்.பஸ்ஸி நியமிக்கப்படுவார் எனத் தகவல்

0 54073

டெல்லியின் முன்னாள் காவல்துறை ஆணையர் பி.எஸ்.பஸ்ஸி ( B.S.Bassi ) புதுச்சேரியின் புதிய துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரண் பேடி அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து ஆளுநருக்கான இடம் வெற்றிடமாக உள்ளது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை புதுச்சேரியை கூடுதலாக கவனித்து வருகிறார். இந்நிலையில் UPSC உறுப்பினரான பஸ்ஸியை புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தில் அவரது பதவிக்காலம் வரும் 28ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments