நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி 18 மாதங்களில் முடிவடையும் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நெடுஞ்சாலைத்துறை உறுதி

0 44487
நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி 18 மாதங்களில் முடிவடையும் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நெடுஞ்சாலைத்துறை உறுதி

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி 18 மாதங்களில் முடிவடையும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

நெல்லை முதல் தென்காசி வரையிலான 4 வழி சாலையை விரைவாக அமைக்கக்கோரி பொதுநல மனு வழக்கு தொடரப்பட்டது.

அதில் 45 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு 412 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 2020 ஆண்டுக்குள் பணிகள் முடியும் என்று கூறியது.

மேலும், ஆயிரத்து 400 மரங்களை அகற்றி, சாலை ஓரங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்தியுள்ளது.ஆனால் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை என அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சாலைப் பணிகள் 18 மாதங்களில் முடிவடையும் என்று கூறியதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments