காஷ்மீர் பிரச்சனைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் - பிரதமர் இம்ரான் கான்
காஷ்மீர் பிரச்சனைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி பேச்சுவார்த்தைக்கான இணக்கமான சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
கொழும்புவில் பிரதமர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசிய இம்ரான் கான், தங்கள் நாடு தீவிரவாதத்தை எதிர்த்து கடுமையாகப் போராடி வருவதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, மும்பைத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மீது கண்துடைப்பு நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றம் சாட்டினார். தீவிரவாதமற்ற சூழலை உருவாக்க வேண்டியது பாகிஸ்தான் கையில் தான் உள்ளது என்றும் தெரிவித்தார்.
Comments