போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ரூ.1000 இடைக்கால நிவாரணம் : வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப தொழிலாளர்களுக்கு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அழைப்பு

0 5740

ரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள், வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டுமென தமிழக போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊதிய உயர்வு கோரி ஊழியர்களுக்காக ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான  பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாக கூறிய அவர்,விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என்றார்.வியாழக்கிழமை அனைத்து பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும் என்றும், மக்களுக்கு எந்தவித பாதிப்பும் நிகழாது என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments