மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி முதலமைச்சர் தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றார்

0 5932

றைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி சென்னை பசுமைவழிச்சாலையிலுள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றார்.

அதே போன்று தேனி மாவட்டம் பார்க் சாலையில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி, தீபம் ஏற்றினார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள வீட்டில் அமைச்சர் தங்கமணி தீபம் ஏற்றி உறுதிமொழி ஏற்றார்.

கோவை ரேஸ்கோர்சில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், மதுரையில் அமைச்சர்கள் ஆர்.பிஉதயகுமார், விஜயபாஸ்கர், ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி தீபமேற்றினார்கள். இதே போன்று பல்வேறு இடங்களில் அமைச்சர்கள் தீபம் ஏற்றினார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments