வீட்டு வேலை அதிகம் செய்ததால், முன்னாள் மனைவிக்கு அதிக இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

0 1935

சீனாவில் விவாகரத்து வழக்கு ஒன்றில், வீட்டு வேலை செய்ததற்காக, முன்னாள் மனைவிக்குக் கணவர் 7 ,700 அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக, விவாகரத்து அதிகரித்து வருகிறது. அதனைக் குறைக்கும் நோக்கத்தில், சீன அரசு விவாகரத்து சட்டங்களில் பல திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில், பெய்ஜிங் நீதிமன்றம் விவாகரத்து வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தைச் சேர்ந்தவர் சென். இவருக்குத் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி வாங், வெளியில் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே வீட்டு வேலைகளை செய்துவந்ததோடு அல்லாமல், அவர்கள் குழந்தையையும் கவனித்து வந்துள்ளார் . இந்நிலையில் செனுக்கும் வாங்க்குமான உறவில் விரிசல் விழுந்துள்ளது. இவ்விரிசல் நாளடைவில் பெரிதாகவே, கடந்தாண்டு இவர்கள் இருவரும் பெய்ஜிங்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்திற்குக் விண்ணப்பித்துள்ளனர்.

விவாகரத்து செய்யும் தம்பதிகளில் யார் வீட்டு வேலைகளை அதிக அளவு செய்தார்களோ அவர்கள் அதிக இழப்பீடு கோர உரிமை உண்டு என நடப்பாண்டில் நடைமுறைக்கு வந்த சீன நாட்டின் புதிய சட்டத்தில் கோரப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென் வேலைக்குச் செல்வதைத் தவிர, வேறு எந்த வீட்டு வேலைகளும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் முன் வைத்தார் வாங் . மேலும், வாங் மட்டுமே வீட்டுப் பொறுப்புகளை ஏற்றதாகவும், குழந்தையையும் தனி ஆளாகக் கவனித்து வந்ததாகவும் கூறினார்.


வழக்கை விசாரித்த பெய்ஜிங் நீதிமன்றம், வீட்டு வேலை அதிகம் செய்ததற்காக 7 ,700 அமெரிக்க டாலர் இழப்பீடாக வாங்கிற்கு சென் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது . மேலும் குழந்தை பராமரிப்புக்காக மாதம் 300 அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்றும், சொத்துக்களைச் சரிசமமாகப் பிரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments