சிக்கிய சிறப்பு டிஜிபி..! 6 பேர் விசாகா கமிட்டி; கட்டாய வெயிட்டிங் லிஸ்ட்..!

0 4710
சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: பெண் போலீஸ் அதிகாரி அளித்த பாலியல் புகாரை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பெண் எஸ்பி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது குறித்து விசாரிக்க, பெண் ஐஏஎஸ் தலைமையில், தமிழ்நாடு அரசு, விசாகா கமிட்டி அமைத்துள்ளது. மேலும், ராஜேஷ்தாசை, கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாருக்கு உள்ளானதால், அவர் மீது, தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ராஜேஷ்தாஸ் டிஜிபி அந்தஸ்தில் பதவி வகித்தவர் என்பதால், அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க, பெண் ஐஏஎஸ் அதிகாரியும், கூடுதல் தலைமைச் செயலாளருமான ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில், 6 பேர் கொண்ட விசாகா கமிட்டியை, தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

ஜெயஸ்ரீ தலைமையிலான அந்த குழுவில், பெண் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக முதன்மை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் சமூக ஆர்வலர் லோரேட்டா ஜோஹ்னா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாருக்கு உள்ளான, சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு உள்துறைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி ஜெயந்த் முரளி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரன் சின்கா, காவல் அமலாக்க சிறப்பு டிஜிபியாகவும், ஷகில் அக்தர், காவல்துறை பயிற்சி கல்லூரியின் சிறப்பு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு எஸ்.பி கயல்விழி, திருவாரூர் எஸ்.பி.யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments