தமிழகத்தில் நாளை வழக்கம் போல பேருந்துகள் ஓடும்: பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை- தமிழக அரசு நடவடிக்கை

0 16087
தமிழகத்தில் நாளை வழக்கம் போல பேருந்துகள் ஓடும்: பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை- தமிழக அரசு நடவடிக்கை

மிழகத்தில் நாளை வழக்கம் போல பேருந்துகள் ஓடும் என்றும் பணிக்கு வராத போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊதிய உயர்வு கோரி நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து கழக தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தை சமாளிக்க அரசு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.

ஆளும் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்க ஊழியர்கள் மூலம் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நாளைக்கு வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் பேருந்துகளை இயக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments