புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஐயங்கள் இருந்தால் விவாதிக்கத் தயார்... டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்.!

0 1071

புதிய வேளாண் சட்டங்கள் குறித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மேலும் ஐயங்கள் இருக்குமானால் அதுபற்றி, திறந்த மனதுடன் விவாதிக்க, அரசு தயாராக இருப்பதாக, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதில், மத்திய அரசு, உறுதிப்பாட்டுடன் உள்ளதாகவும், வேளாண்மை தழைத்தோங்க புதிய சட்டங்கள் உதவும் என்பதை உறுதியாக நம்புவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு சுற்று பேச்சுவார்த்தையின்போதும், விவசாயிகள் எழுப்பிய ஐயங்களுக்கு, உரிய விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தோமர் கூறியுள்ளார். எனவே, மீண்டும் டிராக்டர் பேரணி என்ற அறிவிப்பு, தேவையா என்பதை, விவசாயிகள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், மத்திய அமைச்சர் தோமர் சுட்டிக்காட்டியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments