நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு... ’தேவக்கோட்டையில் காதல் ' படத்தின் ஹீரோ காரைக்குடியில் கைது!
சிவகங்கையில், வழிப்பறியில் ஈடுபட்டு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறித்த திரைப்பட கதாநாயகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சையில் இந்த மாதம் 14 ம் தேதி, அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றார், 49 வயது குழந்தையம்மாள். அப்போது, முகத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், குழந்தையம்மாள் முகத்தின் மீது பெப்பர் ஸ்பிரே அடித்துவிட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 36 கிராம் அளவுள்ள தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.
இதுகுறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் குழந்தையம்மாள் புகார் அளித்தார். காரைக்குடி டிஎஸ்பி அருண் தலைSivaமையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் காவல் துறையினர் சாலைகளில் பதிவான 36 சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அந்த விசாரணையில், காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு சென்ற செயின் பறிப்பு கொள்ளையர்கள், அங்கிருந்து கிராமப்புர வழிகளான கண்டதேவி, உஞ்சனை வழியாக மீண்டும் காரைக்குடிக்கு வந்ததும், பிறகு சுப்புரமணியபுரம் 4 வது வீதிக்கு சென்றதும் தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் விசாரித்த போது கொள்ளையர்கள் தங்கியிருந்த வீட்டைக் கண்டுபிடித்தனர். அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது சீனிவாசன் என்பவனைக் கைது செய்தனர்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவன் தேவகோட்டையில் காதல், குப்பைக் காரன் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த சீனிவாசன் என்பது தெரியவந்தது. அவனுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட துணை நடிகர் தொண்டி தப்பிச்சென்று விட்டதால் போலீசார் தனிபடை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments