உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்: பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டது

0 5530
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்: பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டது

நரேந்திர மோடி விளையாட்டு மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள அகமதாபாத் மோதிரா கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என கூறப்படும் மோதிரா கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் அமர்ந்து ரசிக்கக்கூடிய இந்த கிரிக்கெட் மைதானத்தை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

அகமதாபாத்தில் 63 ஏக்கர் பரப்பளவில் மோதிரா விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு இருந்த விளயாட்டு அரங்கு சுமார் 800 கோடி ரூபாய் செலவில் நவீன கட்டிக்கலையுடன் உலகின் மிகப்பெரிய விளையாட்டு வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சர்வதேச தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு வளாகத்தால், அகமதாபாத் இந்தியாவின் விளையாட்டு நகரமாக புகழ் பெறும் என்றார்.

மோதிரா விளையாட்டு வளாகத்திற்கு சர்தார் வல்லபாய் பட்டேல் பெயர் சூட்டப்பட்டள்ளதாக அமித் ஷா கூறினார். அகமதாபாத்தில் உள்ள நரன்புராவில் மேலும் ஒரு விளையாட்டு வளாகம் கட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார். பட்டேல் விளையாட்டு வளாகத்தில் 3000 கார்கள் மற்றும் 10000 இரு சக்கன வாகனங்களுக்கான நிறுத்துமிட வசதி உள்ளது.

கிரிக்கெட் மைதானத்தில் 25 பேர் அமரக்கூடிய 75 கார்ப்பரேட் தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லா வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் அகாடமி, 10 க்கும் அதிகமான பிட்சுகள் உருவாக்கப்பட்டுள்ளது. கால்பந்து, ஹாக்கி மற்றும் கூடைப்பந்து மைதானங்களும் இந்த வளாகத்தில் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments