திமுக மீதான குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட விவகாரம் ; மேல்முறையீடு செய்ய சட்டப்பேரவை செயலருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி...

0 1583
திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யச் சட்டப்பேரவைச் செயலாளருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யச் சட்டப்பேரவைச் செயலாளருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகச் சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதற்காக திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகச் சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பிய நோட்டீசைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

நீதிபதியின் சான்றொப்பம் பெற்ற அசல் தீர்ப்பு இன்னும் வெளியாகாத நிலையில், மேல்முறையீடு செய்ய அனுமதி கோரிச் சட்டப்பேரவைச் செயலாளர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, சத்திகுமார் அமர்வு, சான்றொப்பமிட்ட தீர்ப்பு நகல் இல்லாமலேயே மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments