கணவருக்கு மனநலம் பாதிப்பு ; மனைவிக்கு தீ வைத்ததில் இருவரும் பலி

0 3425

மனநலம் பாதிக்கப்பட்ட கணவனால் மனைவி எரிந்து கரிக்கட்டையான சம்பவம் மதுராந்தகத்தில் நடந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த இரும்புலி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இருவருக்கு ஜீவா என்ற மனைவியும் ஒரு மகளும் இருந்துள்ளனர். பார்த்திபனுக்கு கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு மாதமாக மனநலம் பாதிப்பிற்கு பார்த்திபன் மருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டை தாழிட்ட பார்த்திபன் தூங்கிக் கொண்டிருந்த தனது மனைவி மற்றும் மகள் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. தீப்பற்றியதில் ஜீவா அலறித்துடித்து வீட்டிற்குள்ளேனே அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்க அவரது மகளுக்கும், பார்த்திபனுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அருகில் வசித்து வந்த உறவினர்கள் பார்த்திபன் வீட்டின் கதவினை உடைத்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் மனைவி எரிந்து ஜீவா கரிக்கட்டையாகினார். தீக்காயத்துடன் இருந்த பார்த்திபனையும், மகளையும் மீட்ட உறவினர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பலனின்றி பார்த்திபனும் உயிரிழக்க, 50 % காயத்துடன் அவரது மகள் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பார்த்திபனின் செயலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments